Tuesday, April 19, 2011

காங்கி (கொங்க தமிழ்)

கொங்கதேசத்தே பேசற இயற்றமிழுக்கு காங்கின்னு ’வேரு.

http://books.google.co.in/books?id=-qY9AAAAIAAJ&q=southern+mysore+kangee&dq=southern+mysore+kangee&hl=en&ei=Oy6tTdOANoLSuwPV693pCg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA

"In the southern part of Mysore the Tamil language is at this day named the Gangee from being best known to them as the language of the people of Kangiam". (Wilks, Mysore, p. 4, F, N.2)


http://books.google.co.in/books?id=KlYIAAAAQAAJ&pg=PT69&dq=congoo+country&hl=en&sa=X&ei=5r2PUPPwMcTyrQfon4GICw&ved=0CC8Q6wEwAA


"KongaLam, their langage"

மொதல்ல உறம்பறைகளைப் பாப்பம்:

துபாஷி தமிழ் (பேபர், சினிமா, டீவி தமிழ்) -சங்கத்தமிழ்-காங்கி
  • அப்பா(கன்னடம்)-ஐயன், ஐயா-அண்ணா, அய்யா
  • அம்மா(தெலுங்கு/கன்னடம்)-ஆய், அம்மை -ஆய்+ஆள் = ஆயாள் திரிபு ஆத்தாள்
  •  தாத்தா(தெலுங்கு - தாத்தய்யா)-தந்தைவழி - அப்பாறய்யன், தாய்வழி- அப்பச்சி
  • பாட்டி(துபாஷி)-தந்தைவழி-அப்பத்தாயாள், தாய்வழி-அம்மாயி,அம்மத்தாள்,அம்மச்சி
  • தாத்தாவின் அப்பா-பாட்டன்
  • தாத்தாவின் அம்மா-பாட்டி
  • தாத்தாவின் தாத்தா-முப்பாட்டன்
  • தாத்தாவின் பாட்டி-முப்பாட்டி
  • சித்தப்பா-சின்னணன்,சின்னய்யன்
  • சித்தி-சின்னாத்தாள்,சின்னாயி (சின்னி),சின்னாயாள்
  • பெரியப்பா-பெரியண்ணன்,பெரியய்யன்
  • பெரியம்மா-பெரியாத்தாள்,பெரியாயி,பெரியாயாள்
  • மாமா-மாமன்
  • அத்தை-அத்தா
  • அத்தை, மாமன் குழந்தைகள் - அத்தை மக்கள், மாமன் மக்கள்
  • அண்ணி - நங்கை
  • நாத்தனார் - மச்சணன்
  • கொழுந்தன் - கொழுந்தனார்
  • கொழுந்தி - கொழுந்தியா(ள்)
  • புருஷன் அண்னன் - மச்சாண்டார்
  • மாமியார் - மாமியாள் (மாமியா)
  • மாமனார் - மாமனா
காய்கள்:
வெங்காயம்-ஈராங்காய்
பூண்டு-வெள்ளாங்காய்